உங்களை எமது இணையத்தளத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம்

காடுகள்

Saturday, 20 March 2010


மரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது. உலகின் பல பகுதிகளிலுமுள்ள காடுகள் காற்றிலுள்ள கரியமில வாயுவை உட்கொள்கின்றன. மேலும் இவை பல விலங்குகளுக்கு புகலிடமாக விளங்குகின்றன. காடுகள் வெள்ளப்பெருக்கைக்கட்டுப்படுத்துவதுடன் மண் அரிப்பையும் தடுக்கின்றன. காடுகளில் பல வகைகள் உண்டு. சதுப்பு நிலக்காடுகள், பசுமை மாறாக்காடுகள் என்பன அவற்றுள் சில வகைகளாகும்.


அதிசயங்கள்

Friday, 19 March 2010



























ரோடொஸின் கொலோசஸ்




(Colossus of Rhodes) கிரேக்கத் தீவான ரோடொசில் ஈலியோஸ் கடவுளுக்காக எழுப்பப்பட்ட மாபெரும் சிலையாகும். 34 மீட்டர் உயரமாகவிருந்த இச்சிலை உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகும். Chares of Lindos இனால் கி. மு. 292 - கி. மு. 280 காலப்பகுதியில் அமைக்கப்பட்ட இச்சிலை 56 ஆண்டுகளே நிலைத்திருந்தது. கி. மு. 224 இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில்சிலையின் காற்பகுதியில் முறிவு ஏற்பட்டு விழுந்துவிட்டது.

மௌசோல்லொஸின் மௌசோலியம்

ஹலிகார்னசஸின் மௌசோலியம் அல்லது மௌசோல்லொஸின் சமாதி (கிரேக்கம், Μαυσωλεῖον της Ἁλικαρνασσοῦ) கி.மு 353- கிமு 350 இடையில் ஹலிகார்னசஸ் (தற்போது துருக்கி போத்ரம்) என்னுமிடத்தில் மௌசோல்லொஸ் என்ற பெர்சிய அரசின் ஆளுனருக்கும் அவரது மனைவி மற்றும் சகோதரிக்கும் கட்டப்பட்ட சமாதியாகும். இந்தக் கட்டிடம் பழம் கிரேக்கத்தின் புகழ்பெற்ற கட்டிட வடிவமைப்பாளர்கள் சத்யோஸ் மற்றும் பைதிஸ் வடிவமைத்ததாகக் கூறப்படுகிறது. அது ஏறத்தாழ 45 மீட்டர் (135 அடி) உயரம் கொண்டு நான்கு பக்க சுவர்களில் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு கிரேக்க சிற்பியின் கலைப்படைப்புகளை தாங்கி யிருந்தது. இதன் அழகைக் கண்டே இதனை பழங்கால உலக அதிசயங்களில் ஒன்றாக தேர்ந்தெடுத்தனர்.

மௌசோலியம் என்ற சொல் மௌசோல்லொஸிற்கு காணிக்கையாக்கப் பட்ட கட்டிடம் என்ற பொருளில் எழுந்தபோதும் நாளடைவில் எந்த சமாதிக்கும் பயன்படுத்தக் கூடிய சொல்லாக ஆனது

ஆர்ட்டெமிஸ் கோயில்

ஆர்ட்டெமிஸ் என்னும் கடவுளுக்காகக் கட்டப்பட்ட ஒரு கிரேக்கக் கோயில் ஆகும். டயானாவின் கோயில் என்றும் அழைக்கப்படுகின்ற இது, கி.பி 550 அளவில் இப்போதைய துருக்கியிலுள்ள எஃபேசஸ் என்னுமிடத்தில் கட்டப்பட்டது. இது பாரசீகப் பேரரசின் ஆர்க்கியெமனிட் (Achaemenid) வம்ச காலத்தைச் சேர்ந்தது. பண்டைக்கால உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்ற இக் கோயிலில் இப்பொழுது அதன் அத்திவாரமும், உடைந்த சிற்பவேலைப் பகுதிகளும் மட்டுமே எஞ்சியுள்ளன. இதன் கூரை தவிர்ந்த எல்லாப் பகுதிகளும் சலவைக்கற்களினால் கட்டப்பட்டிருந்தன. இவ்விடத்தில் இதற்கு முந்திய காலக் கோயில்களும் இருந்ததாகத் தெரிகிறது. வெண்கலக் காலத்திலேயே ஒரு கோயில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

கல்லிமாக்கசு என்பார் தமது பாடல்களில் வழிபாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இவ்விடத்தின் தோற்றத்தை கிரேக்கத் தொன்மங்களில் வரும் அமேசோன்களுடன் தொடர்புபடுத்தி உள்ளார். இவர்களுடைய வழிபாடு உருவ வழிபாடாக இருந்ததாக அவர் கற்பனை செய்தார். கி.மு ஏழாம் நூற்றாண்டில் பழைய கோயில் பெரு வெள்ளத்தினால் அழிந்துபோயிற்று. உலக அதிசயமாகக் கரிதப்பட்ட புதிய கோயிலின் கட்டுமானம் கி.மு 550 அளவில் தொடங்கியது. 120 ஆண்டுகள் பிடித்த இத் திட்டம் முதலில் கிரேத்தக் கட்டிடக்கலைஞரான செரிசிபுரோன் என்பவராலும் அவரது


மகன்மெத்தாசெனசுa என்பவராலும் வடிவமைத்துக் கட்டப்பட்டடது.





ஒலிம்பியாவின் சேயுஸ் சிலை




(Statue of Zeus at Olympia) கிமு 433 இல் பீடியாஸ் என்னும் கிரேக்கச் சிற்பியால் கிரீஸ்நாட்டில் செதுக்கப்பட்டது. இது பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கிபி 394 இல், இதுகொன்ஸ்தந்தினோப்பிள் (தற்கால இஸ்தான்புல்) நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கக்கூடும் என்றும், அங்கு தீக்கு இரையானதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தச் சிலை, இதற்கெனக் கட்டப்பட்ட கோயிலின் நிரலின் முழு அகலத்தையும் நிரப்பியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. சமகால மூலங்களின்படி, இது 12 மீட்டர் உயரத்தைக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. சேயுஸ் தந்தத்தில் செதுக்கப்பட்டு, யானைத் தந்தம், தங்கம், கருங்காலி போன்றவற்றாலும் விலைமதிப்பற்ற கற்களாலும் இழைக்கப்பட்ட செடார் மரச் சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டிருந்தது. சேயுஸின் வலக்கரத்தில், வெற்றிக் கடவுளான (பெண்) நிக்கேயின் சிறிய சிலையும், இடக்கரத்தில் கழுகும் இருந்தது

பபிலோனின் தொங்கு தோட்டமும்





(Hanging Gardens of Babylon) (செமிராமிஸின்தொங்கு தோட்டம் எனவும் அறியப்படுகிறது) பபிலோனின்சுவர்களும் ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இவ்விரண்டும் நெபுச்சட்னெஸ்ஸாரால் (Nebuchadnezzar) தற்போதையஈராக் நாட்டினுள் அடங்கும் பபிலோனில் கி.மு 600 அளவில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. எனினும் இது உண்மையிலேயே இருந்ததா என்பது பற்றிய சந்தேகமும் இன்னும் உள்ளது.
ஸ்ட்ராபோ (Strabo), டையோடோரஸ் சிகுலஸ் (Diodorus Siculus) போன்ற கிரேக்கச் சரித்திர ஆசிரியர்களால் விரிவாகப் பதியப்பட்டுள்ள இத் தொங்கு தோட்டம் இருந்தது பற்றி, பபிலோனிலிருந்த மாளிகையில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மேலோட்டமான சில சான்றுகள் தவிர, வேறு சான்றுகள் மிகக் குறைவாகவேயுள்ளன. இது பற்றிய வியத்தகு விவரணங்களை நியாயப்படுத்தக் கூடிய போதிய சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை.

கிசாவின் பெரிய பிரமிட்

ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாகும். இதுவே உலகின் மிகப் பிரபலமான பிரமிட்டுமாகும். இது 4ஆவது வம்ச எகிப்திய பாரோ கூபுவின் சமாதியாகும். இது கட்டிமுடிக்கப்பட்டது, கிமு 2570 என்று கணக்கிடப்பட்டுள்ளது. நவீன எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் புறநகர்ப் பகுதியிலுள்ள, பண்டைய கிசாநெக்ரோபோலிஸில் அமைந்துள்ள மூன்று பெரும் பிரமிட்டுகளில் பெரியதும், காலத்தால் முந்தியதும் இதுவே.

பெரிய பிரமிட் 137 மீட்டர்கள் (481 அடி) உயரமும், ஒரு பக்கம் 235 மீட்டர்கள் (775 அடிகள்) கொண்ட சதுர வடிவ அடிப்பகுதி 5.5 ஹெக்டேயர்கள் (13.5 ஏக்கர்கள்) பரப்பளவையும் கொண்டுள்ளது. 4000 ஆண்டுகளுக்கு மேலாக மனிதனால் கட்டப்பட்ட, உலகின் மிக உயந்த அமைப்பாக இருந்துவந்தது. 1439ல் 143 மீட்டர்கள் உயரமானஸ்ட்ராஸ்பர்க்கின் மின்ஸ்டர் இந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது. இதன் சதுரவடிவ அடிப்பகுதியின் நான்கு பக்கங்களுக்குமிடையேயான நீள வழு 0.6 அங்குலங்கள் மட்டுமேயென்பதும், கோணங்கள் சரியான சதுர அமைப்பிலிருந்து 12 செக்கண்ட் அளவே விலகியிருப்பதுவும், கட்டுமான வேலையின் துல்லியத்தைக் காட்டுகிறது. இதன் சதுரவடிவப் பக்கங்கள் பெருமளவுக்கு அச்சொட்டாக கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்குத் திசைகளில் அமைந்துள்ளன. சரிந்த முகங்கள் 51 பாகை 51 நிமிடக் கோணத்தில் சரிந்துள்ளன.







உலக அதிசயங்கள்

பழங்கால உலகின் ஏழு உலக அதிசயங்கள்மனிதரால் கட்டப்பட்ட அமைப்புக்களாகும். இவ்வதிசயங்களைப் பட்டியலிட்டவர், சிடோனின் அண்டிப்பேற்றர் என்று பொதுவாகக் கருதப்படுகிறது. கி.மு 140 அளவில் எழுதப்பட்ட கவிதையொன்றில், இவ்வமைப்புக்களைப் பெருஞ் சாதனைகளாக இவர் குறித்துள்ளார். இதற்கு முன்னரும்,ஹீரோடோத்தஸ் என்பவரும், சைரீனின் கல்லிமாச்சுஸ் என்பவரும் இதுபோன்ற பட்டியல்களை உருவாக்கியிருந்ததாகக் கருதப்படுகின்றது.


காடுகள்

Thursday, 11 March 2010





















world time

Related Posts with Thumbnails