மௌசோல்லொஸின் மௌசோலியம்
Friday, 19 March 2010
ஹலிகார்னசஸின் மௌசோலியம் அல்லது மௌசோல்லொஸின் சமாதி (கிரேக்கம், Μαυσωλεῖον της Ἁλικαρνασσοῦ) கி.மு 353- கிமு 350 இடையில் ஹலிகார்னசஸ் (தற்போது துருக்கி போத்ரம்) என்னுமிடத்தில் மௌசோல்லொஸ் என்ற பெர்சிய அரசின் ஆளுனருக்கும் அவரது மனைவி மற்றும் சகோதரிக்கும் கட்டப்பட்ட சமாதியாகும். இந்தக் கட்டிடம் பழம் கிரேக்கத்தின் புகழ்பெற்ற கட்டிட வடிவமைப்பாளர்கள் சத்யோஸ் மற்றும் பைதிஸ் வடிவமைத்ததாகக் கூறப்படுகிறது. அது ஏறத்தாழ 45 மீட்டர் (135 அடி) உயரம் கொண்டு நான்கு பக்க சுவர்களில் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு கிரேக்க சிற்பியின் கலைப்படைப்புகளை தாங்கி யிருந்தது. இதன் அழகைக் கண்டே இதனை பழங்கால உலக அதிசயங்களில் ஒன்றாக தேர்ந்தெடுத்தனர். மௌசோலியம் என்ற சொல் மௌசோல்லொஸிற்கு காணிக்கையாக்கப் பட்ட கட்டிடம் என்ற பொருளில் எழுந்தபோதும் நாளடைவில் எந்த சமாதிக்கும் பயன்படுத்தக் கூடிய சொல்லாக ஆனது
0 comments:
Post a Comment