பபிலோனின் தொங்கு தோட்டமும்
Friday, 19 March 2010
(Hanging Gardens of Babylon) (செமிராமிஸின்தொங்கு தோட்டம் எனவும் அறியப்படுகிறது) பபிலோனின்சுவர்களும் ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றன. இவ்விரண்டும் நெபுச்சட்னெஸ்ஸாரால் (Nebuchadnezzar) தற்போதையஈராக் நாட்டினுள் அடங்கும் பபிலோனில் கி.மு 600 அளவில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. எனினும் இது உண்மையிலேயே இருந்ததா என்பது பற்றிய சந்தேகமும் இன்னும் உள்ளது.
ஸ்ட்ராபோ (Strabo), டையோடோரஸ் சிகுலஸ் (Diodorus Siculus) போன்ற கிரேக்கச் சரித்திர ஆசிரியர்களால் விரிவாகப் பதியப்பட்டுள்ள இத் தொங்கு தோட்டம் இருந்தது பற்றி, பபிலோனிலிருந்த மாளிகையில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மேலோட்டமான சில சான்றுகள் தவிர, வேறு சான்றுகள் மிகக் குறைவாகவேயுள்ளன. இது பற்றிய வியத்தகு விவரணங்களை நியாயப்படுத்தக் கூடிய போதிய சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை. இந்த பதிவின் லிங்கை உங்கள் சைடுபாரில் கொண்டுவர:
0 comments:
Post a Comment