கிசாவின் பெரிய பிரமிட்
Friday, 19 March 2010
ஏழு உலக அதிசயங்களில் ஒன்றாகும். இதுவே உலகின் மிகப் பிரபலமான பிரமிட்டுமாகும். இது 4ஆவது வம்ச எகிப்திய பாரோ கூபுவின் சமாதியாகும். இது கட்டிமுடிக்கப்பட்டது, கிமு 2570 என்று கணக்கிடப்பட்டுள்ளது. நவீன எகிப்தின் தலைநகரமான கெய்ரோவின் புறநகர்ப் பகுதியிலுள்ள, பண்டைய கிசாநெக்ரோபோலிஸில் அமைந்துள்ள மூன்று பெரும் பிரமிட்டுகளில் பெரியதும், காலத்தால் முந்தியதும் இதுவே.
பெரிய பிரமிட் 137 மீட்டர்கள் (481 அடி) உயரமும், ஒரு பக்கம் 235 மீட்டர்கள் (775 அடிகள்) கொண்ட சதுர வடிவ அடிப்பகுதி 5.5 ஹெக்டேயர்கள் (13.5 ஏக்கர்கள்) பரப்பளவையும் கொண்டுள்ளது. 4000 ஆண்டுகளுக்கு மேலாக மனிதனால் கட்டப்பட்ட, உலகின் மிக உயந்த அமைப்பாக இருந்துவந்தது. 1439ல் 143 மீட்டர்கள் உயரமானஸ்ட்ராஸ்பர்க்கின் மின்ஸ்டர் இந்த இடத்தைப் பிடித்துக்கொண்டது. இதன் சதுரவடிவ அடிப்பகுதியின் நான்கு பக்கங்களுக்குமிடையேயான நீள வழு 0.6 அங்குலங்கள் மட்டுமேயென்பதும், கோணங்கள் சரியான சதுர அமைப்பிலிருந்து 12 செக்கண்ட் அளவே விலகியிருப்பதுவும், கட்டுமான வேலையின் துல்லியத்தைக் காட்டுகிறது. இதன் சதுரவடிவப் பக்கங்கள் பெருமளவுக்கு அச்சொட்டாக கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்குத் திசைகளில் அமைந்துள்ளன. சரிந்த முகங்கள் 51 பாகை 51 நிமிடக் கோணத்தில் சரிந்துள்ளன.
இந்த பதிவின் லிங்கை உங்கள் சைடுபாரில் கொண்டுவர:
0 comments:
Post a Comment