செவ்வாய்க்கிரகத்தில் உயிரினம் வாழலாமென நம்ப்பப்ப்டுகிறது.
Friday, 28 May 2010
Read more...
உலகின் முதலாவது சுழலும் மாடிக் கட்டிடமொன்றை துபாயில் ஸ்தாபிப்பதற்கான திட்டம் கட்டிடக் கலைஞர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 420 மீற்றர் உயரமான இந்த 80 மாடிக் கட்டிடமானது நியூயோர்க்கைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் டேவிட் பிஷரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டிடத்தின் மாடிகளுக் கிடையில் சுழலும் இயந்திர சாதனங்கள் பல பொருத்தப்பட்டுள்ளதால், ஒவ்வொரு மாடியையும் விரும்பிய திசைக்கு திருப்ப முடியும் என டேவிட் பிஷர் கூறுகிறார். இந்தச் சுழலும் மாடியிலுள்ள ஒவ்வொரு குடியிருப்பு அலகும் ஒரு சதுர அடிக்கு 3000 டொலர் வீதம், 4 மில்லியன் டொலரிலிருந்து 40 மில்லியன் டொலர் வரையான விலைக்கு விற்பனையாகவுள்ளது. மேற்படி சுழலும் மாடிக் கட்டிடத்தை நிர்மாணிக்கும் பணிகள் 2010 ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
கடல்கன்னி அதிசயம் ஆனால் உண்மை
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்குமிடையில் இடம்பெற்றுள்ள
இறுதிப்போரின்போது செல்தாக்குதலில் மாட்டிக்கொண்ட கடல்கன்னி முல்லைத்தீவின் கடல்க்கரையில் ஒதிங்கியுள்ளது.
இந்தக்காணொளி கைத்தொலைபேசி மூலம் எடுக்கப்பட்டுள்ளது
இந்த வீடியோவைப்பார்ப்பதற்கு இதை அழுத்தவும்
அண்மையில் இலங்கையில் நிந்தாவூர் என்னும் இடத்தில் ஒரு மீனவர் வலையில் இறந்த நிலையில் அகப்பட்ட கடற்கன்னியால் அப்பகுதி மக்களிடத்தில் பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது என பல இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது. அத்துடன் அதற்கு ஆதாரமாக வீடியோக் காட்சியும் வெளியாகியிருந்தது.
Redwood எனும் மரம் . இவை உலகத்திலுள்ள மிகப் பாரிய மரங்கள் என்று பெயர் பெற்றவை. இவற்றின் தண்டு நேராக உயர்ந்து வளர்ந்து ,கீழ் நோக்கி சற்றுச் சாய்வாக கிளைகளைப் பரப்புகின்றன. கிழுள்ள படத்தில் இதன் தோற்றத்தைப் பார்க்கலாம். கிட்டத்தட்ட 8 -12 அடி வரை விட்டமுள்ள தண்டுடன் 300 அடிக்கு மேல் உயர்ந்து வளர்கின்றன. இந்த அசாதாரண உயரத்தினால். வேர்களினால் உறுஞ்சப் படும் நீர் உச்சிவரை செலுத்தப் படுவதில்லை. இதன் உச்சியில் காணப் படும் ஊசி முனைகள் அங்கே படியும் பனியைத் தேக்கி வைத்து உறிஞ்சும் தன்மையுள்ளன. இதனால் பனி கொட்டும் பிரதேசங்களில் தான் இந்த மரங்கள் பெருகிக் காணப் படுகின்றன. 20 வீதம் விதைகளாலும், 80 வீதம் இயற்கைப் பதியத்தாலும் இவை இனத்தைப் பெருக்குகின்றன.
இந்த மரங்களில் சில டைனசோ இருந்த காலங்களிலிருந்து உயிர் வாழ்கின்றன. உலகில் பல இடங்களில் காணப் பட்டாலும் சில பாரிய ,பழைய மரங்கள் கலிபோனியாவிலும்,நெவேடா மலையடிகளிலும் , சீனாவிலும் காணப் படுகின்றன.
இந்த மரத்தின் பட்டை மிகத் தடிப்பானது.நெருப்பினால் அழியாதவண்ணம் ஒரு கவசம் போல் இது காக்கின்றது.தண்ணீராலும் இந்த மரங்கள் இலகுவில் உக்கிப் போவதில்லை. இந்தப் பட்டையின் சுவை பூச்சிகளினால் விரும்பப் படாததாகவும் , நச்சுத் தன்மையுள்ளதாகவும் இருப்பதால், இந்த மரம் பூச்சிகளினால் பாதிக்கப் படுவதில்லை. இதனால் தளபாடங்கள் செய்யவும், விசேடமாக கட்டட வேளைகளில் விரும்பிப் பாவிக்கப் படுகிறது. அமிலங்களைத் தாங்கக் கூடிய சக்தியுள்ளவை என்பதால், 1930-1960 கால கட்டத்தில் ஆகாய hவிமானங்களில் battery களில் இவை பாவிக்கப் பட்டனவாம்.
(aamadilla) என்பது ஒரு வகையான எறும்பு உண்ணி விலங்கு இது எதிரிகளைக்கண்டவுடன் தன்னைக் பந்து போல் உருட்டிக்கொள்ளும்
காண்டாமிருகம் காணப்படும் இடங்கள்
கழுகு என்பது ஒரு வலுவான பெரிய பறவை இனத்தையும் குறிக்கும். இப்பறவைகளுக்கு பெரிய கண்களும் கூரிய நுனியுடைய வளைந்த அலகும், வலுவான கால்களும், அகண்டு நீண்ட இறக்கைகளும் உள்ளன. இவைகளின் கண் பார்வை மிகவும் கூரியது. மிக உயரத்திலே பறந்தாலும், தரையில் நகரும் எலி, கோழிக்குஞ்சு போன்ற சிறு விலங்குகளைக் கண்டால், சடார் என்று கீழே பாய்ந்து கவ்விக் கொண்டு போய் கொன்று உண்ணும். சிறு விலங்குகளை இவ்வாறு கொன்று தின்பதால், இவ் பறவைகளைக் கொன்றுண்ணிப் பறவைகள் (birds of prey) என்று சொல்வதுண்டு. வானில் இருந்து திடீர் என்று கீழே பாய்ந்து கௌவும் ஆற்றல் கொண்டது.
கழுகு இனங்கள் பெரும்பாலும் ஆசியா-ஆப்பிரிக்க-ஐரோப்பாவில் தான் அதிகம் காணப்படுகின்றன. அமெரிக்கக் கண்டத்தில் பெரும் கழுகுகள் மிகவும் குறைவே. வட அமெரிக்காவில் இரண்டே இரண்டு இனங்கள்தான் உண்டு. அவை வெண்டலைக் கழுகும்,பொன்னாங் கழுகும் ஆகும். கழுகுகளில் பெட்டைக் கழுகு சேவற்கழுகை விட சற்று பெரிதாக இருக்கும்கழுகுகளில் பற்பல வகைகள் உண்டு. இவ்வினத்தைச் சேர்ந்த பறவைகளைத் தமிழில் ,எழால், கழுகு, கங்கு, கங்கம், கூளி, பருந்து, பணவை, பாறு, பூகம், வல்லூறு என அழைக்கப்படுகின்றன. பிணந்தின்னிக் கழுகுகள், பாம்புப்பருந்து, கரும்பருந்து, குடுமி எழால் என்பன பெரும்பாலும் குறிப்பிட்ட கழுகின் உள்ளினங்களைக் குறிக்கும்.
கடல் கழுகு(sea eagle)
உலகம் முழுவதும் எட்டு வகையான கடல் கழுகுகள் உள்ளன. இவை ஒரே மாதிரியான வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளன. இவற்றில் மூன்று வகையான கழுகுகள் ஆர்ட்டிக் பிரதேசத்தில் வாழ்கின்றன. சாம்பல் நிற கழுகு யுரேசியாவிலும், வழுக்கைத் தலை கழுகுகள் வட அமெரிக்காவிலும், ஸ்டெல்லர்ஸ் கழுகுகள் கிழக்கு சைபீரியா மற்றும் வடக்கு ஜப்பானில் காணப்படுகிறது.
ஸ்டெல்லர்ஸ் கழுகு மிக பயங்கரமான தோற்றம் உடையது. கழுத்து, நெற்றி, வால் இவை வெள்ளை நிறமாகவும், மீதி உடல் முழுவதும் கருப்பு நிறமாக இருக்கும். சில பெண் கழுகுள் 18 கிலோ வரை இருக்கும். யுரேசியன் கடல் கழுகுகள் 7.5 கிலோவுக்கு மேல் இருக்காது. வழுக்கைத் தலை கழுகுகள் இதைவிட சிறியதாக இருக்கும். இவை எல்லாம் பெண் கழுகுகளின் எடையே. ஆண் கழுகுகள் இதைவிட ஒரு மடங்கு அதிகமாக இருக்கும். இந்த கடல் கழுகுகளில் அலகு பொருத்தமில்லாமல் மிகப் பெரியதாக இருக்கும். இதன் அலகு கோல்டன் ஈகிள் அலகை விட பெரியதாக இருக்கும். அதே சமயத்தில் குறைந்த அளவு உணவே உண்ணும். உணவாக கடல் பறவைகள், முயல்கள், காட்மீன், பூனைமீன் இவற்றை உண்ணும். மேலும், நீரில் மிதக்கும் இறந்த திமிங்கலத்தையும் உண்ணும். சிறிய ஆடுகளைக் கூட வேட்டையாடும் திறன் கொண்டது.
.
பாறு எனும் கழுகு(Lammergeier அல்லது Gypaetus barbatus) உயர்மலைப்பகுதிகளில் வாழும் பெரும் பிணந்தின்னிவகைக் கழுகுகளில் ஒன்று.இந்தியாவின் வடபகுதியிலும், திபெத்,ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா தென் ஐரோப்பாஆகிய இடங்களிலும் உள்ள மலைப்பகுதிகளில் வாழ்கின்றது