சிகிரியாக் குன்று
Sunday, 25 April 2010
சிகிரியாக் குன்று இலங்கையின் இணையற்ற கலைப் பாரம்பரியத்தின் சின்னமாகக் கருதப்படுகிறது. இது மாத்தளை மாவட்டம்அனுராதபுரம் மாவட்டத்தில் தம்புள்ள நகரத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. 1144-அடி உயரமான இக்குன்றினுள் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சித்திரங்கள் பல உள்ளன. இவை 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே இக்கோட்டையை முதலாம் காசியப்பன் (காஷ்யபன்) (கி.பி. 477-495) அமைத்தான். கோட்டையை சுற்றி அகழியும் கட்டப்பட்டுள்ளது. சிகிரியா குன்றானது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) பாதுகாக்க படவேண்டிய கலாச்சார முக்கியதுவம் வாய்ந்த இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவியங்களின் சிறப்பு இக் குகையினுள் ஃபிராஸ்கோ (FRASCO) முறையில் இயற்கை வர்ணங்கள் கொண்டு வரையப்பட்ட பல சித்திரங்கள் காணப்படுகின்றன. இவைகளில் பல இன்னும் அழியாமல் அழகாகக் காட்சி தருகின்றது. இந்த ஒவியங்களில் காணப்படும் பெண்கள் சிலரால் தேவதைகள் (அப்சரஸ்கள்) எனவும் சிலரால் காசியப்பனின் மனைவிகள் எனவும் கூறப்படுகின்றனர். இவர்களில் சிலர் கையில் தட்டை ஏந்தியவாறும், சிலர் மலர்க்கொத்தை ஏந்தியவாறும் சிலர் மேலாடை இன்றியும், சிலர் மேலாடையுடனும், தனித்தும், கூட்டமாகவும் வரையப்பட்டுள்ளனர்.
இந்த பதிவின் லிங்கை உங்கள் சைடுபாரில் கொண்டுவர:
0 comments:
Post a Comment