உங்களை எமது இணையத்தளத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம்

நோயினால் பாதிக்கப்பட்ட மம்மி

Sunday, 25 April 2010





Manama’ எனப்படும் பண்டய கால நகரம் ‘Bahrin’ நாட்டில் உள்ளது. இங்கு கண்டுபிடிக்கப் பட்ட 4000 வயதைக் கொண்ட மம்மிக்கு ஏய்ட்ஸ் அறிகுறிகள் இருப்பதாக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த கொடூர நோய் பரவி வந்தற்கான அறிகுறிகள் தென்படுகிறது. இவர்களால் ஏய்ட்ஸ் நோய் பல இடங்களில் பரவி இருக்கலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அந்த மம்மி எச்.ஐ.வீ கிருமிகளால் பாதிக்கப்பட்டிருக்கிறது.

பராமரிக்கபடாமல் புதைந்து போன இந்த நகரத்தில் வாழ்ந்த மக்கள் ஓரின உறவினை அமல் படுத்தியதால் கடவுளால் தண்டிக்க பட்டுவிட்டார்கள் என சரித்திரங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. இதற்கு காரணம் கொடுர நோய் எனவும் சொல்லியிருக்கிறார்கள்.

ஆராய்ச்சிக் குழுவின் தலைவரான Prof.Claude Poncheral கூறுகயில் இது ஒரு ஆச்சர்ய பட வைக்கும் அதிசய கண்டுபிடிப்பு என்கிறார். இங்கு உள்ள மக்கள் போரினால் அழிந்து போகவில்லை, மாறாக இயற்கயிலேயே மறணமுற்று காலப் போக்கில் மக்கள் குடி போக பயந்து தானாகவே இந்நகரம் அழிந்துவிட்டது.

1996-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ‘மனமா’ நாகரம் இருந்த தளத்தின் சவக் குழிகளை தோண்டியிருக்கிறார்கள் ஆராய்ச்சிக் குழுவினர். அங்கு பழுதுபடாத ஒரு மண்டபம் இருப்பதை கண்டுபிடித்தார்கள். மண்டபத்தின் நடுவில் சுண்ணாம்பு கற்களால் செய்யப் பட்ட சில சவப் பெட்டிகளை இருந்தது. அதில் ஐந்து அடி உயரம் கொண்ட மூன்று ஆண் மம்மிக்களை கண்டெடுத்துள்ளார்கள். இந்த மம்மிக்கள் இறக்கும் சமயத்தில் இருபது வயதிற்குள் இருந்திருக்க வேண்டுமென ஆராய்ச்சியில் குறிப்பிட்டுள்ளார்கள். தகவல்கள் அடிப்படையில் அந்த மூவரும் வினோத நோயினால் உடல் பாதிக்கப் பட்டுள்ளார்கள். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் அது ஏய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்ட மம்மிக்கள் என்பதை அறிந்தவர்கள் ஆதிர்ச்சிக்குள்ளாகினர்.

Bahrin-னில் இருக்கும் மற்ற பண்டய குடியிருப்பு பகுதிகளிழும் இந்த ஆராய்ச்சி தொடரப்பட்டிருக்கிறது. அங்கு உள்ள தகவல்களை திரட்டி அக்காலத்தில் இந்த நோய் எந்த அளவில் மனிதனை பாதித்துள்ளது எனும் ஆராய்ச்சி பணியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள் Prof.Poncheral குழுவினர்.

நன்றி,

விக்னேஷ்


இந்த பதிவின் லிங்கை உங்கள் சைடுபாரில் கொண்டுவர:

0 comments:

Post a Comment

world time

Related Posts with Thumbnails