உங்களை எமது இணையத்தளத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம்

மனிதனின் மூதாதையார் இதோ....

Thursday 6 May 2010




ஆதாம், பிரம்மா என மதங்கள் முதல் மனிதனின் தோற்றம் குறித்து பல்வேறு தகவல்களைச் சொல்லிக் கொண்டிருந்தாலும் விஞ்ஞானம் அதையெல்லாம் நம்பத் தயாராய் இல்லை.குரங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்பதையே விஞ்ஞானம் பொதுவாக ஏற்கிறது. எனில் குரங்குகள் எங்கிருந்து வந்தன ? அதன் மூதாதையார் யார் என எழுப்பப்படும் கேள்விகளுக்கு விடையாய் இருக்கக் கூடும் என நம்பப்படுகிறது இந்த உலர் எலும்புக் கூடு.இந்த உயிரி வாழ்ந்த காலம் சுமார் 4.7 கோடி ஆண்டுகளுக்கு முந்தையது எனும் செய்தி வியப்பூட்டுகிறது.குரங்குகள், மனிதன் போன்ற அனைத்துக்குமே முன்னோடியாக இருக்கக் கூடும் இந்த உயிரி என்பதே விஞ்ஞானிகளின் நம்பிக்கை.உலகிலுள்ள உயிரிகள் இரண்டு மாபெரும் பிரிவாகப் பிரிந்து ஒரு பிரிவு குரங்கு, மனிதன் என மாறியது, இன்னொரு பிரிவு லெமூரியர்கள், இதர ராட்சத விலங்குகள் என மாறியது. இந்த உயிரி அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என விஞ்ஞான பாஷை பேசுகின்றனர் விஞ்ஞானிகள்.இந்த எலும்புக் கூடு ஒரு பெண் உயிரியின் எலும்புக் கூடு எனவும், இதற்கு மனிதர்களுடைய இயல்புகள் பல இருந்திருக்க வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.இந்த எலும்புக் கூடைக் கொண்டு மனிதர்களுக்கும் பிற உயிரிகளுக்கும் இடையேயான தொடர்பை இந்த எலும்புக் கூடு விளக்கும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை. இந்த பதிவின் லிங்கை உங்கள் சைடுபாரில் கொண்டுவர:

0 comments:

Post a Comment

world time

Related Posts with Thumbnails