கழுகின் வகைகள்
Saturday, 15 May 2010
கழுகு என்பது ஒரு வலுவான பெரிய பறவை இனத்தையும் குறிக்கும். இப்பறவைகளுக்கு பெரிய கண்களும் கூரிய நுனியுடைய வளைந்த அலகும், வலுவான கால்களும், அகண்டு நீண்ட இறக்கைகளும் உள்ளன. இவைகளின் கண் பார்வை மிகவும் கூரியது. மிக உயரத்திலே பறந்தாலும், தரையில் நகரும் எலி, கோழிக்குஞ்சு போன்ற சிறு விலங்குகளைக் கண்டால், சடார் என்று கீழே பாய்ந்து கவ்விக் கொண்டு போய் கொன்று உண்ணும். சிறு விலங்குகளை இவ்வாறு கொன்று தின்பதால், இவ் பறவைகளைக் கொன்றுண்ணிப் பறவைகள் (birds of prey) என்று சொல்வதுண்டு. வானில் இருந்து திடீர் என்று கீழே பாய்ந்து கௌவும் ஆற்றல் கொண்டது.
கழுகு இனங்கள் பெரும்பாலும் ஆசியா-ஆப்பிரிக்க-ஐரோப்பாவில் தான் அதிகம் காணப்படுகின்றன. அமெரிக்கக் கண்டத்தில் பெரும் கழுகுகள் மிகவும் குறைவே. வட அமெரிக்காவில் இரண்டே இரண்டு இனங்கள்தான் உண்டு. அவை வெண்டலைக் கழுகும்,பொன்னாங் கழுகும் ஆகும். கழுகுகளில் பெட்டைக் கழுகு சேவற்கழுகை விட சற்று பெரிதாக இருக்கும்கழுகுகளில் பற்பல வகைகள் உண்டு. இவ்வினத்தைச் சேர்ந்த பறவைகளைத் தமிழில் ,எழால், கழுகு, கங்கு, கங்கம், கூளி, பருந்து, பணவை, பாறு, பூகம், வல்லூறு என அழைக்கப்படுகின்றன. பிணந்தின்னிக் கழுகுகள், பாம்புப்பருந்து, கரும்பருந்து, குடுமி எழால் என்பன பெரும்பாலும் குறிப்பிட்ட கழுகின் உள்ளினங்களைக் குறிக்கும்.
பொன்னாங் கழுகு(Golden Eagle)
கடல் கழுகு(sea eagle)
உலகம் முழுவதும் எட்டு வகையான கடல் கழுகுகள் உள்ளன. இவை ஒரே மாதிரியான வாழ்க்கை முறையைக் கொண்டுள்ளன. இவற்றில் மூன்று வகையான கழுகுகள் ஆர்ட்டிக் பிரதேசத்தில் வாழ்கின்றன. சாம்பல் நிற கழுகு யுரேசியாவிலும், வழுக்கைத் தலை கழுகுகள் வட அமெரிக்காவிலும், ஸ்டெல்லர்ஸ் கழுகுகள் கிழக்கு சைபீரியா மற்றும் வடக்கு ஜப்பானில் காணப்படுகிறது.
ஸ்டெல்லர்ஸ் கழுகு மிக பயங்கரமான தோற்றம் உடையது. கழுத்து, நெற்றி, வால் இவை வெள்ளை நிறமாகவும், மீதி உடல் முழுவதும் கருப்பு நிறமாக இருக்கும். சில பெண் கழுகுள் 18 கிலோ வரை இருக்கும். யுரேசியன் கடல் கழுகுகள் 7.5 கிலோவுக்கு மேல் இருக்காது. வழுக்கைத் தலை கழுகுகள் இதைவிட சிறியதாக இருக்கும். இவை எல்லாம் பெண் கழுகுகளின் எடையே. ஆண் கழுகுகள் இதைவிட ஒரு மடங்கு அதிகமாக இருக்கும். இந்த கடல் கழுகுகளில் அலகு பொருத்தமில்லாமல் மிகப் பெரியதாக இருக்கும். இதன் அலகு கோல்டன் ஈகிள் அலகை விட பெரியதாக இருக்கும். அதே சமயத்தில் குறைந்த அளவு உணவே உண்ணும். உணவாக கடல் பறவைகள், முயல்கள், காட்மீன், பூனைமீன் இவற்றை உண்ணும். மேலும், நீரில் மிதக்கும் இறந்த திமிங்கலத்தையும் உண்ணும். சிறிய ஆடுகளைக் கூட வேட்டையாடும் திறன் கொண்டது.
.
பாறு எனும் கழுகு(Lammergeier அல்லது Gypaetus barbatus) உயர்மலைப்பகுதிகளில் வாழும் பெரும் பிணந்தின்னிவகைக் கழுகுகளில் ஒன்று.இந்தியாவின் வடபகுதியிலும், திபெத்,ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா தென் ஐரோப்பாஆகிய இடங்களிலும் உள்ள மலைப்பகுதிகளில் வாழ்கின்றது
0 comments:
Post a Comment