பாடும் பறவை
Sunday, 9 May 2010
மதுரமான இசை பாடும் பறவைகளில் ஒன்று காட்டு மைனா. சதாரணமாக நாம் பார்க்கும் மைனாவைப் போன்றே இருக்கும் இப்பறவையின் வால் சற்று குட்டையானது.
ஆங்கிலத்தில் இப்பறவையை கிரேகிள் (Grackle) என்றழைப்பார்கள். விஞ்ஞான ரீதியாக இப்பறவைக்கு அளிக்கப் பட்ட பெயர் கிரேகுலா ரிலிஜியோஸா (Gracula riligiosa) என்பதாகும்.
மலை மைனாவை மேற்குத் தொடர்ச்சி மலை, இமயமலை அடிவாரம், மத்யப் பிரதேசம், மஹாராஷ்ட்ரா போன்ற இடங்களில், சுமார் 2500 முதல் 5000 அடி வரையிலான இடங்களில் உயர்ந்த மரங்கள் அடர்ந்த காடுகளில் காணலாம்.
காட்டின் நிசப்த்தத்தைக் கிழித்துக்கொண்டு கணீரென ஒரு பறவையின் குரல் கேட்டால் அது காட்டு மைனாவின் குரல்தான் என்று நிச்சயமாகச் சொல்லலாம். பழனி மலைக்கும், தேக்கடிக்கும் சென்றவர்கள் காட்டு மைனாவைப் பார்க்காமலோ அதன் தேமதுரக் குரலைக் கேட்காமலோ இருந்திருக்க முடியாது.
காட்டு மைனாக்கள் விரும்பி உண்பது ஆல், அத்தி போன்ற மரங்களிம் பழங்கள், தேன் மற்றும் புழு, பூச்சிகள்.
காட்டு மைனாக்கள் இனப் பெருக்க காலத்தில் ஜோடிகளாக வாழ்ந்தாலும் மற்ற நாட்களில் சுமார் இருபது பறவைகள் வ்ரை கொண்ட கூட்டமாக வாழும்.
மூன்று நான்கு கிலோமீடரிலான துரம் வரை உள்ள காட்டு மைனாக்கள் தங்களுக்குள் மூன்று முதல் பதிமூன்று வகையான இசை வடிவங்களில் பேசிக்கொள்ளுமாம். அங்கிருந்து சற்றே தூரம் சென்றால் அங்குள்ள காட்டு மைனாக்கள் அதே பாஷையில் பேசிக்கொள்ளுமா என்பது நிச்சயமில்லையாம். காட்டு மைனா இந்த விஷயத்தில் நம்மைப் போலவே இருக்கிறது இல்லையா?
லைரே பறவை (Lyrebirds) பல் குரலில் பாடும் சக்தி கொண்ட அதிசயமான பறவையினம்.லைரே பறவை (Lyrebirds) மிகவும் மிரமிக்கும் வகையில் தனது சூழலில் இருக்கக்கூடிய அனைத்து இசைகளையும் மிமிகிரி (mimicker) செய்யும் ஆற்றல் படைத்தது . இந்த பறவையினம் உலகிலேயே அவுஸ்ரெலியாவின் கிழக்கு பகுதியில் தான் காணப்படுகின்றது (படத்தில் சிவப்பு மை பகுதி). இந்த பறவைகள் மைலின் தோகையினையும் குயிலின் உடலினை ஒத்தும் காணப்படுகின்றன. இந்த பறவை வெப்ப பிரதேசங்களிலுள்ள ஈரவலைய அடர் காடுகளில் வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த பறவையின் முக்கிய உணவாக உக்கிய மர பாகங்களில் காணப்படும் புழுக்களையும் , மற்றும் பூச்சிகளையும் உண்கின்றது. மேலும் இந்த பல் குரல் பாடும் சக்தி ஆண் லைரே பறவைக்கு மட்டுமே உள்ளதுடன் இது தனது பெண் இனத்தினை கவருவதற்காக இந்த பல் குரல் விநோதம் செய்வது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த பறவையின் பெயர் ஒரு பழைமையான இசைக்கருவி லைரே (Lyre) காரணமாக சூட்டப்பட்டது இன்னுமொரு சிறப்பம்சமாகும்.
லைரே பறவை (Lyrebird) யின் பல்குரல் ஜாலம் வீடியோ வடிவில்.
0 comments:
Post a Comment