உங்களை எமது இணையத்தளத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம்

மிகவும் விசமுள்ளபாம்புகளும் விசமற்றவையும்

Saturday, 15 May 2010


குளிர்ரத்த பிராணிகளாக அறியப்படும் பாம்புகள் பூமியில் இல்லாத இடங்கள் தான் அபூர்வம், பொதுவாக உயிரினங்கள் வாழக்கூடிய அனைத்து இடங்களிலும் சமாளித்து வாழக்கூடிய விலங்கு பாம்பு!, பல்லி இனத்தின் கால் இல்லாத நீட்சியா, அல்லது கால் முளைத்த பாம்பு தான் பல்லியா என அவ்வபோது விவாதம் நடக்கும், ஆனாலும் அறிவியல், முதலில் காலுடன் இருந்த பல்லியினம் உயிர் பிழைக்க மண்ணுக்கு அடியில் வாழ வேண்டி பழகியது, அதனால் கூரிய கண் பார்வையையும், கால்களையும் இழந்து, அதற்கு பதிலாக நுகரும் சக்தியையும், தரையில் தெரியும் சிறிய அதிர்வுகளையும் அறியும் சக்தி பெற்றது என்கிறது!


சில பாம்புகளுக்கு விஷம் இருப்பது படைப்பின் அற்புதம் என சிலர் சிலாகித்து கொண்டாலும், அவையும் பரிணாமவளர்ச்சியின் ஒரு அங்கம் என்பது அறிவியல் உண்மை! நமக்கு விஷமாக தெரியும் அவை பாம்புகளுக்கு ஊறும் என்சைம்!, நமக்கு இரைப்பையில் ஊறும் ஒரு என்சைம் சாதாரண தோலில் பட்டால் அதை முழுவதுமாக அரித்து விடும், அதே போல் தான் சில விலங்குகளின் விஷமும்!, ஒருமுறை குவியலில் venom மற்றும் poison க்கு உள்ள வித்தியாசம் என்சைம்களால் அவை வேறுபட்டிருந்தாலும் , காமனான வித்தியாசம், வெனோம் என அழைக்கபடுவது ரத்தத்தில் ஏற்றப்படுவதால் உயிரிழப்பை ஏற்படுத்தும், பாய்ஷன் குடிப்பதால் ஏற்படுத்தும்!, பாம்பின் விஷம் உயிர்காக்கும் மருந்தாக பயன்படுவது பலரும் அறிந்ததே!, பாம்பின் விஷக்கடிக்கு அட்ரோபைன் என்னும் இன்னொரு தாவர விஷம் மருந்தாக தரப்படுகிறது!, விஷமுறிவுக்கு பரவலாக அறியப்பட்ட மருந்து அட்ரோபைன்!


எது அதிக விஷமுள்ள பாம்பு என பலருக்கு ஏற்பட்ட சர்ச்சைக்கு பின் ஒரு முடிவுக்கு வந்தார்கள்!, அளவில் அதிக விஷமுள்ளது ராஜநாகம், அதிலிருக்கும் விஷம் ஒரு யானையை கொல்வதற்க்கு போதுமானது, ஆனால் பொதுவாக ராஜநாகம் நகர்புறம் பக்கம் வருவதில்லை என்பதால் அதனால் உயிரிழப்புகள் குறைவு, சிறிது அளவானாலும் வீரியமிக்க விஷம் கொண்டது தைப்பேன் வகையை சேர்ந்த பாம்பு! கடித்த ஐந்து நிமிடத்திற்குள் உயிர் போய்விடும்! உலகில் வேகமான விஷமுள்ள பாம்பு, “ப்ளாக் மாம்பா” மணிக்கு 20 கிலோமீட்டர் வேகம் வரை செல்லக்கூடியது!, ஆனாலும் உலகம் மொத்தம் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் பாம்பு விரியன் வகைகளே!, இந்தியாவில் இருக்கும், கட்டுவிரியன், கண்ணாடி விரியன், மற்றும் பாலைவன பாம்புகளாக அறியபட்ட கிளுகிளுப்பை பாம்பு அனைத்தும் விரியன் குடும்பத்தை சேர்ந்ததே!

உலகில் மிக புத்திசாலியாக அறியபட்ட பாம்பாக விரியன் வகைகளை தான் சொல்கிறார்கள்! சுற்றுவட்டாரம் 50 மீட்டர் சுற்றளவில் நடக்கும் அதிர்வுகளை அறிய கூடிய தன்மை உண்டு!, தனது பிளவுபட்ட நாக்குகள் மூலம் காற்றில் உள்ள வாசனையை உணர்ந்து எதிரியின் தன்மை, அவைகள் உணவுக்கு ஆகுமா என பகுத்தறியும் தன்மையும் உண்டு!, அமெரிக்க ராணுவம் தற்பொழுது இவ்வகை பாம்புகளை தான் ரேடாருக்கு மாற்று சக்தி கண்டுபிடிக்க ஆராய்ச்சி செய்து வருகிறது

!


இது விரியன் (vipper)இனத்தைச்சேர்ந்தது







இது விரியன் (adder)இனத்தைச்சேர்ந்தது இது மிகவும் விஷம் கூடியது







விஷமற்ற பாம்பாக இருந்தாலும் மனிதனை பயமுறுத்துவதில் அனகோண்டா பெரும்பேர் பெற்றது!,” ஆனைகொண்டான்” என்பதில் இருந்து மறுவிய பெயர் என சங்ககால இலக்கியங்களை காட்டினாலும், அவை மலைப்பாம்புகளையே குறிக்கும் என்பது அறிவியல் கூற்று! அனகோண்டா வகை பாம்புகள் தெனஅமெரிக்காவின் பிரேசில் காடுகளில் மட்டுமே காணப்படுவது இதற்கு சாட்சி! பிரேசிலில் இருக்கும் அமேசான் காடுகளில் மட்டும், பூமியில் நாம் அறிந்த உயிரினங்கள் அளவுக்கு அறியபடாத உயிரினங்கள் வாழ்வதாக அறிஞர்கள் சொல்கிறார்கள்!









பாம்புகளை பற்றிய மூட நம்பிக்கைகளுக்கும் பஞ்சமில்லை! இந்தியாவில் மட்டுமல்லாது உலகில் பல தேசங்களில் பாம்புகள் தெய்வமாக வணக்கபடுகிறது, ஆபிரஹாம மதங்களில் பாம்பு சைத்தானின் குறியீடு, அவையல்லாது சாரை பாம்பின் வாலை தடவினால் சாம்பார் ருசியாக இருக்கும் என பத்து ருபாயில் ஆரம்பித்து, ராஜ மாணிக்ககல் பல லட்சம் மதிப்புள்ளது என கல்லுக்கு அடியில் LED லைட் வைத்து படம் காட்டி ஏமாற்றும் கூட்டமும் நிறைய உள்ளது! அதில் ஏமாந்தவர்கள் கடைசி வரை அபபடி ஒன்னு இருக்கு, ஆனா இவன் வேற கல்லை காட்டி என்னை ஏமாத்திட்டான்னு சொல்லும் போது பாவமாக இருக்கும்!, சமீபகாலமாக மண்ணூளி பாம்பு என்ற வகை மருத்துவ குணங்களுக்காக சீனாவிற்கு கடத்தபடுவதாக சொல்கிறார்கள்! இதுவரை அவற்றால் எந்த ஒரு பயனும் இருப்பதாக அறிவியல் சொல்லவில்லை! ஆனால் மூட நம்பிக்கைகள் மனிதனின் பிரதான குணம் என்று ஆகிவிட்ட படியால் அறிவியல் கூற்றுகள் அவர்களுக்கு உளரலாக தன் தெரியும்!

மனிதனை தவிர வேறு எந்த விலங்குகளூம் தன் இனத்தை சேர்ந்த உயிரினத்தை கொல்வதில்லை என சர்வமுக்தி பெற்ற மிட்நைட் சாமியார்கள் திருவாய் மொழிவார்கள், ஆனால் அது உண்மையல்ல! துணைதேடும் ஆண் ராஜநாகம், சரியான துணை கிடைக்காத பட்சத்தில் எதிர்படும் எந்த பெண் ராஜநாகமாக இருந்தாலும் கொன்று விடும்!, மேலும் ராஜநாகத்திற்கு பிரதான உணவே சாரைபாம்பு என அழைக்கப்படும்

ரேட் ஸ்னேக்” தான்! கருவுற்ற ராஜநாகங்கள் பாம்பினத்திலேயே வித்தியாசமாக கீழே கிடக்கும் சருகுகளால் கூடு அமைத்து முட்டையிட்டு அடைகாக்கும் என்பது பாம்பின ஆச்சர்யம், 40 நாள் கழித்து முட்டையை உடைத்து வரும் குட்டி ராஜநாகம் அப்போது கடித்தாலும் விஷம் இருக்கும் என்பது எச்சரிக்கை!

துப்புவதால் விஷத்தை எதிரியின் மேல் இந்த பாம்பு தெளிக்கும்,

ராஜா நாகம் இதனைக் (cobra) என்று அழைப்பர்

, ஒரு துளி விஷம் கண் பார்வையை பறிக்கும்!










கருநாகம் இதனைக்(krait) என்பர்





இந்த பதிவின் லிங்கை உங்கள் சைடுபாரில் கொண்டுவர:

1 comments:

வால்பையன் 17 May 2010 at 02:05  

எங்கேயோ படிச்ச மாதிரியே இருக்கே!?

:)

Post a Comment

world time

Related Posts with Thumbnails