அதிவிசமுள்ள பூச்சிகள்
Thursday, 13 May 2010
இந்த தேளைப்பற்றி சில தகவல் (DeathStalker): இந்தத் தேள் கொட்டினால் குழந்தைகளுக்கும் வயது முதிர்ந்தோருக்கும் மரணம் நேரிடும் அபாயம் உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் இதன் விஷம், நீரிழிவு மற்றும் மூளைப் புற்றுநோய் போன்றவற்றிற்கு மருந்தாகவும் பயன்படுவதுதான்
டீட்ஸி / செட்ஸி" ஈ (Tsetse Fly )
ஆப்பிரிக்காவிலுள்ள இந்த இரத்தம் குடிக்கும் ஈ கடித்தால் முதலில் தொடர்ந்த தூக்கம், தலைவலி, காய்ச்சல் போன்றவை தோன்றி பிறகு அப்படியே விட்டால் கியாரண்டியாக மரணம் நோக்கிய பயணம்தான்.
இந்த ஈ கடித்தால் இப்படி உடல் இருக்கும்
ஆப்பிரிக்க காடுகளில் மனிதர்களுக்கு எமனாகும் ஒருவகை தேனீகள் காணப்படுகின்றன. தேன் கூட்டில் இருக்கும் இந்த வகை தேனீக்கள் ஒருவரை கொட்டுவதற்கு ஆரம்பித்தால், மரணம் நிச்சயம். கடந்த 40 ஆண்டுகளில் மட்டும் ஆப்பிரிக்க கண்டத்தில் 600 பேர் தேனீக்களின் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் மற்ற எல்லா தேனீக்களையும் விட இந்த இன தேனீயின் கூட்டில் தான் அதிக அளவில் தேன் கிடைக்கிறது.ஆப்பிரிக்காவில் தோன்றி தற்போது பல கண்டங்களுக்கும் பரவியிருக்கும் இந்த சிறிய தேனீ, மிக முர்க்கமாகத் தாக்கும் குணமுள்ளது. இவை 500-க்கும் அதிகமாகக் கூட்டம் கூட்டமாக ஆக்ரோஷத்துடன் கொட்டி மனிதனை சாகடிக்கக் கூடியது. அடர்ந்த மரங்களினூடே மட்டுமல்லாமல் வீடுகளிலேயும் கூடமைத்து, அருகில் சென்றாலே கோபமடைந்து தாக்கும் குணமுள்ளவை இந்தத் தேனீக்கள்.
ஆப்பிரிக்காவில் தோன்றி தற்போது பல கண்டங்களுக்கும் பரவியிருக்கும் இந்த சிறிய தேனீ, மிக முர்க்கமாகத் தாக்கும் குணமுள்ளது. இவை 500-க்கும் அதிகமாகக் கூட்டம் கூட்டமாக ஆக்ரோஷத்துடன் கொட்டி மனிதனை சாகடிக்கக் கூடியது. அடர்ந்த மரங்களினூடே மட்டுமல்லாமல் வீடுகளிலேயும் கூடமைத்து, அருகில் சென்றாலே கோபமடைந்து தாக்கும் குணமுள்ளவை இந்தத் தேனீக்கள்.
0 comments:
Post a Comment