உங்களை எமது இணையத்தளத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம்

செவ்வாய்க்கிரகத்தில் உயிரினம் வாழலாமென நம்ப்பப்ப்டுகிறது.

Friday, 28 May 2010


(mars )செவ்வாய்க்கோள் உயிர்கள் வாழலாம் என நம்ப்பபடும் கோள் ஆகும்.செவ்வாய்க்கிரகத்தினை செங்கோளென அழைப்பர் செவ்வாய் கிரகத்தின் மண், உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான அனைத்து சக்திகளையும் கொண்டு உள்ளதாகவும், உப்பு கலந்த சுற்றுச்சூழல் இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ்வதற்கான சூழல் இருக்கிறதா என்பது பற்றி ஆய்வு மேற்கொள்வதற்காக அமெரிக்கா பீனிக்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பி வைத்தது. இந்த கிரகத்தில் இறங்கிய பீனிக்ஸ் விண்கலம் சமீபத்தில் தான் பனிக்கட்டிகள் அங்கு இருப்பதை கண்டுப்பிடித்தது. இதன் மூலம் அங்கு தண்ணீர் கிடைக்கும் என்று நம்ம்பப்படுகிறது . அதன் பிறகு அந்த விண்கலத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும் இயந்திரத்தின் கை என்ற பகுதி மூலம் மண் அள்ளப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில், செவ்வாய் கிரகத்தின் வட துருவ பகுதியில் உப்பு கலந்த சுற்றுச்சூழல் உள்ளது என்பதும், மனிதர்கள் வாழ்வதற்கு தேவையான ஆர்கானிக் கார்பன் சத்து உள்ளது என்பதும் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது
செவ்வாய்கிரகம்




செவ்வாயில் ஆராட்சி செய்யும் இயந்திரம்



இந்த பதிவின் லிங்கை உங்கள் சைடுபாரில் கொண்டுவர:

0 comments:

Post a Comment

world time

Related Posts with Thumbnails