உங்களை எமது இணையத்தளத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம்

உலகத்தின் உயரமான கட்டிடங்களும் மற்று சுழல்கட்டிடமும்

Monday 24 May 2010


உலகக்கட்டிடங்கள் இந்த வரிசையில் உள்ளது



உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற பெருமையைப் பெற்றுள்ள புர்ஜ் துபாய் இதன் உயரம் 2,683 அடி என்று கூறப்பட்டாலும், துல்லியமான உயரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. 169 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தின் 76வது மாடியில் உலகிலேயே உயரமான நீச்சல் குளம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.






தைவானில் உள்ள தைபே-101 கட்டிடம்தான் உலகிலேயே இரண்டாவது உயரமான கட்டிடம் என்ற பெருமையை பெற்றிருந்தது.இதன் (1,671 அடி) யாக இருக்கிறது






உலகின் முதலாவது சுழலும்மாடிக்கட்டிடம்

உலகின் முதலாவது சுழலும் மாடிக் கட்டிடமொன்றை துபாயில் ஸ்தாபிப்பதற்கான திட்டம் கட்டிடக் கலைஞர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 420 மீற்றர் உயரமான இந்த 80 மாடிக் கட்டிடமானது நியூயோர்க்கைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் டேவிட் பிஷரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.


இந்தக் கட்டிடத்தின் மாடிகளுக் கிடையில் சுழலும் இயந்திர சாதனங்கள் பல பொருத்தப்பட்டுள்ளதால், ஒவ்வொரு மாடியையும் விரும்பிய திசைக்கு திருப்ப முடியும் என டேவிட் பிஷர் கூறுகிறார். இந்தச் சுழலும் மாடியிலுள்ள ஒவ்வொரு குடியிருப்பு அலகும் ஒரு சதுர அடிக்கு 3000 டொலர் வீதம், 4 மில்லியன் டொலரிலிருந்து 40 மில்லியன் டொலர் வரையான விலைக்கு விற்பனையாகவுள்ளது. மேற்படி சுழலும் மாடிக் கட்டிடத்தை நிர்மாணிக்கும் பணிகள் 2010 ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த பதிவின் லிங்கை உங்கள் சைடுபாரில் கொண்டுவர:

0 comments:

Post a Comment

world time

Related Posts with Thumbnails