காண்டாமிருகம் வாழ்க்கை
Tuesday, 18 May 2010
காண்டாமிருகம் என்பதுஇந்தியாவின் வடகிழக்கு வடகிழக்கு பகுதியிலும்,நேப்பாளத்திலும், பூட்டானின் சில பகுதிகளிலும் காணப்படும் ஒரு பாலூட்டியாகும். இவ்விலங்கு இமயமலையின் அடிவாரத்தில் உள்ள புல்வெளிகள் மற்றும் அதை அடுத்துள்ள காடுகளில் வாழ்கின்றது. முற்காலத்தில் இவ்விலங்கு கங்கை சமவெளி முழுவதும் வாழ்ந்து வந்தது, பின்னர் ஏற்பட்ட வாழ்விட சீர்கேட்டாலும், வேட்டையாடப்பட்டதாலும் இதன் உயிர்த்தொகை குன்றி தற்சமயம் வெறும் 3,000 விலங்குகள் மட்டும் இச்சூழலில் வாழ்கின்றன. அவற்றில் மிகுதியான 1,800 விலங்குகள் அசாம் மாநிலத்தில் வாழ்கின்றன. நேப்பாளத்தின்சித்வன் தேசியப் பூங்காவில் 400க்கும் மேற்ப்பட்ட விலங்குகள் வாழ்வதாக 2008ல் கணக்கிடப்பட்டுள்ளது.ஐரோப்பியர்கள் முதன்முதலில் அறிந்த காண்டாமிருகம் இந்திய காண்டாமிருகம் ஆகும். இதனை 1758ஆம் ஆண்டு கரோலசு லின்னேயசு வகைப்படுத்தி ஆங்கிலத்தில் "Rhinoceros" என்று பெயரிட்டார். கிரேக்க மொழியில் "rhino" என்றால் மூக்கு என்றும் "ceros"' என்றால் கொம்பு என்றும் பொருள்படும். தமிழில் இதற்குமூக்குக்கொம்பன் என்று பெயர்
இந்த பதிவின் லிங்கை உங்கள் சைடுபாரில் கொண்டுவர:
காண்டாமிருகம் காணப்படும் இடங்கள்
காண்டாமிருகம் (Rhinoceros)
0 comments:
Post a Comment