உங்களை எமது இணையத்தளத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம்

55அடி நீளமுள்ள பாம்பு

Wednesday, 12 May 2010



பாம்புகளில் இரண்டாவது அதிகவிசமுள்ள பாம்பு


பாம்பைக் கண்டா சாதரணமாக படையே நடுங்கும். அவுஸ்திரேலியாவிலே மண்ணிற பாம்பென்றால் (Brown Snake) எல்லாருமே மிகவும் பயப்பிடுவார்கள்.ஏனென்றால் இது உலகிலுள்ள மிகவும் விசமுள்ள தரைப் பாம்புகளிலேயே இது இரண்டாவதாம்.




இரண்டு மீற்றர் நீளமுள்ள இந்தப் பாம்பு தரையில் துரிதமாக ஊரும். இந்தப் பாம்பு ஒருமுறை கடித்துவிட்டு ஓடிவிடாது. இதற்கு விரைவில் கோபம் வந்திடுமாம்.யாராவது தன்னைத் தாக்க வருகிறார்கள் எனும்போதுதான் அது கோபத்தில் திரும்பத் திரும்ம்பக் கொத்துகிறதாம்.இவை மக்கள் வாழும் இடங்களை அண்டி வாழுகின்றன. காரணம் என்னவெனில் அங்கு தான் இவைக்கு தேவையான உணவு அதாவது எலி, தவளை, முயல் போன்றன கிடைக்கிறது. இதனால் அவுஸ்திரேலியாவின் சிறு நகர்ப்புறங்களில் இவற்றின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது.இவை ஆவுஸ்திரேலியாவிலேயே குயின்ஸ்லாந்தில்த் தான் அதிகமாக் காணப்படுகின்றன. எங்கள் பக்கத்து சிறு நகரமான வெஸ்ற்லேக்கில்(Westlake) மண்ணிறப் பாம்பொன்று கடந்த வாரம் ஒரு நாயைக் கடித்திருக்கிறது. அதுவும் வீட்டிற்குள்ளே வந்து தாக்கி இருக்கிறது. எந்தப் பொந்துக்குள்ளும் இலகுவில் இந்த வகைப் பாம்புகள் நுழையக் கூடியவை என்பதால் இவை வீடுகளுக்குள் (யன்னல் ஊடாக) செல்வதில் ஆச்சரிய்ப்பட ஒன்ற்மில்லை.


நாயைக் கொத்துவதைக் கண்ட அந்த வீட்டுப் பெண் துவாய் ஒன்றை பாம்பிற்கு எறிந்து அது மூடுப்பட்டவுடன் அந்த நாயை அந்த இடத்தை விட்டு அகற்றி இருக்கிறார். பின்னர் பாம்பு பிடிப்பவரின் உதவியை நாடினார். தனது நாய்க்கு இந்த ஆபத்து ஏற்பட்டதால் அயலவருகு இச் சப்பவம் ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும் என அந்தப் பெண் வேன்டிக் கொண்டார்.


இந்த பதிவின் லிங்கை உங்கள் சைடுபாரில் கொண்டுவர:

1 comments:

www.thalaivan.com 14 May 2010 at 02:09  

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com


You can add the vote button on you blog:

http://thalaivan.com/page.php?page=blogger

THANKS

Post a Comment

world time

Related Posts with Thumbnails